Monday, September 28, 2009

உலக மொழிகளில் தமிழுக்கு...

உலகில் இன்று பேசும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ் மொழி 15ஆவது இடத்தில் இருப்பதாக மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவைப் பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன.
1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மொழியுரிமைப் பிரகடனத்தின்படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன.
ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் பிராந்தியத்தில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன.
இந்நிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் மொழி 15 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்குப்பகுதி, மற்றும் 1862 ஆம் ஆண்டு பிரிட்டன் காலணித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலைநாட்டுப்பகுதி என்பவற்றில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது.
தமிழ் மொழிக்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. போர்த்துக்கல், நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் உள்ளன.
இவற்றை 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை போன்று நாசமாக்கமுடியாது என மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Wednesday, September 09, 2009

சிறிய இடைவெளிக்குப் பின்னர்.....

சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ் ஆய்வுத் தலைப்பு வழி உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பல சுவையான தகவல்களை பரிமாறிக் கொள்வோம்.